ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாவன் பர்வாலுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாவன் பர்வாலுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உங்களின் சிறப்பான செயல்பாடு, நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு மாரத்தான் போட்டியில் இந்தியா மீண்டும் பதக்க மேடை ஏறுவதை உறுதி செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்தச் சிறப்பான சாதனை, நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்களின் புதிய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



