கணினி சார் பொருட்கள் இறக்குமதிக்கு தடை!

Electronics | Gadget | Laptop | Tablet | Computer | Import duty | Government of India

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறி வெளிநாட்டிலிருந்து கணினி, மடிக்கணினி, டேப்லெட் ஆகியவற்றை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு கடந்த வியாழக்கிழமை கட்டுப்பாடுகளை விதித்தது

வெளிநாடுகளிலிருந்து கணினி, மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட கணினி சார் பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு 3 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் கணினி, மடிக்கணினி, டேப்லெட்களில் 65 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. 35 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுபவை. இந்த நிலையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறி வெளிநாட்டிலிருந்து கணினி, மடிக்கணினி, டேப்லெட் ஆகியவற்றை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு கடந்த வியாழக்கிழமை கட்டுப்பாடுகளை விதித்தது.

மடிக்கணினி உள்ளிட்ட கணினி சார் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான அத்தியாவசிய இறக்குமதி உரிமம் பெற்றவர்கள் அவற்றை இறக்குமதி செய்து கொள்ள தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Electronics | Gadget | Laptop | Tablet | Computer | Import duty | Government of India

அதே சமயம், சிறிய ரக மடிக்கணினிகளை ஈ – காமர்ஸ் எனப்படும் இணையதள விற்பனை மூலமாகப் பெறலாம் என்றும் அவற்றிற்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அனைத்து வழக்கமான வரிகளும் பொருந்தும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்தது. மேலும் இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்த நிலையில், அதற்கு ஒன்றிய அரசிடம் பல்வேறு தொழில் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து கணினி, மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட கணினி சார் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு 3 மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. அதாவது அக்டோபர் 31ம் தேதிவரை இறக்குமதி செய்யப்படலாம் என்றும் நவமபர் 1ம் தேதியில் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *