ஒரு பெண் என்று பாராமல் அசிங்கமான வார்த்தைகளால் என்னை திட்டுகிறார்கள் என்று, தாராபுரம் பிரச்சார மேடையில் கண்கலங்கி பேசிய வேட்பாளர் சத்தியபாமாவிற்கு, முதலமைச்சர் ஜோசப்விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
தாராபுரத்தில் வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப்விஜய் இன்று பிரசாரம் செய்தார். பிரச்சார மேடையில் த.வெ.க.வேட்பாளர் சத்தியபாமா பேசினார்.அப்போது, அதிமுக இயக்கத்தின் தலைமை பிடிக்காமல் வெளியே வந்தேனே தவிர, அந்த இயக்கம் பிடிக்காமல் வெளியே வரவில்லை. நாங்கள் துரோகி இல்லை. என் மீது பழி சுமத்துகின்றனர்.
ஒரு பெண் என்று பாராமல் அசிங்கமான வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர் என்றும் இதனால்தான் தற்போது மொபைலே நான் பார்ப்பதில்லை. அவ்ளோ அசிங்கமா என்னை பேசுகிறார்கள், நான் அப்படி என்ன தவறு செய்தேன் என்றும், அம்மாவினுடைய உண்மையான உணர்வு எனக்குள் இருந்தது என்றும் இன்று ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் பதவிக்கு வந்த தூய தலைவர் நமது முதலமைச்சர் ஜோசப்விஜய்.
என்றும் என் மீது தவறு இருந்தால் முதலமைச்சர் மீண்டும் என்னை வேட்பாளராக நிறுத்திருப்பாரா, நானும் உங்களிடம் வந்து துணிச்சலாக ஓட்டு கேட்க முடியுமா எனக் கூறிக்கொண்டே கண் கலங்கிய வேட்பாளர் சத்தியபாமாவிற்கு, முதலமைச்சர் ஜோசப்விஜய் ஆறுதல் தெரிவித்தார்.


