ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்..!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இந்தியா கூட்டணிக் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான போக்கையும், 13 புள்ளி 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தையும் மக்களிடம் கொண்டு செல்லத் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளார்.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை, தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும் வாக்காளர் உரிமை பறிப்பையும் கண்டித்து மக்கள் மன்றத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், அக்டோபர் 6-ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், டெல்லியில் தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்று கூட்டு மனு அளிக்கவுள்ளனர் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

மேலும், ஜனநாயகத்தையும் வாக்காளர் உரிமைகளையும் காப்பாற்ற, அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பேரணியில் தங்களோடு இணைய வேண்டும் என்று கார்கே பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்,

இல்லையெனில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *