
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ஜோதி மல்ஹோத்ரா போலவே பாகிஸ்தானுக்கு சென்று பேட்டிகள் எடுத்த தமிழக யூடியூபர் ஒருவரையும் பாகிஸ்தான் உளவாளியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்தியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் ஜோதி மல்ஹோத்ரா என்ற ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் குறித்த தகவல்கள் தான் அதிர வைக்கின்றன.
பாகிஸ்தானுக்கு ஜோதி மல்ஹோத்ரா என்ன மாதிரியான தகவல்களைக் கொடுத்தார்? என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த பின்னணியில்தான், ஜோதி மல்ஹோத்ரா போல தமிழகத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவரும் பாகிஸ்தானுக்கு சென்று பேட்டிகளை எடுத்து தமது யூடியுப் சேனலில் பதிவிட்டிருந்தார். இது குறித்து அவர் தந்தை பேசுகையில், “ஐந்து, ஆறு பேர் வந்தார்கள். அரை மணி நேரம் வீடு முழுக்க தேடினார்கள். அதன் பின்னர் காவல்துறையினர் ஒரு மடிக்கணினி மற்றும் மூன்று கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர்,” என்றார்.ஜோதி ஒரு முறை மட்டும் தான் பாகிஸ்தான் சென்றதாகக் கூறும் ஹரிஷ் குமார், “என் மகள் அரசாங்கத்தின் அனுமதியுடன் தான் சென்றார். அவர் சோதனை செய்யப்பட்டு தான் விசா வழங்கப்பட்டது. அதன் பின்னர் தான் பாகிஸ்தான் சென்றார்.” எனக் கூறினார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை களை எடுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்தவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிட்டத்தட்ட 8,000 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இளம்பெண் வ்ளாகரான ஜோதி மல்ஹோத்ரா, 3,77,000 க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்..
கிட்டத்தட்ட 8,000 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சசி தரூர் (காங்கிரஸ்), ரவி சங்கர் பிரசாத் , சஞ்சய் குமார் ஜா , பைஜயந்த் பாண்டா, கனிமொழி கருணாநிதி, சுப்ரியா சுலே (என்சிபி), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையில் மொத்தம் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளன. மேலும், ஐ.நா சபை பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளன. பெஹெல்காம் தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடி, பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்ததுதல் தொடர்பாக இந்த குழுவினர், உலக நாடுகளிடம் இந்தியாவின் கருத்துகளை தெரிவிக்க உள்ளனர்.




