பராமரிப்பு பணி காரணமாக, இன்று மற்றும் வருகிற 16, 19-ந் தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து

Advertisements

பராமரிப்பு பணி காரணமாக, இன்று மற்றும் வருகிற 16, 19-ந் தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே, பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 16, 19-ந் தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

இந்த நாட்களில் சென்ட்ரல் -பொன்னேரிக்கு காலை 10.30 மணிக்கும், சென்ட்ரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணிக்கும், கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40 மணிக்கும், பொன்னேரி-சென்ட்ரலுக்கு மதியம் 1.18, 3.33 மணிக்கும், மீஞ்சூர்-சென்ட்ரலுக்கு மதியம் 2.59 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *