ஜல்லிக்கட்டு களத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ்..!

Advertisements

நடிகர் அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘கருப்பு பல்சர் படத்தின் டிரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடிகர் அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘கருப்பு பல்சர்’ என்ற படம் வருகின்ற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய  முரளி கிரிஷ் இயக்கியுள்ளார். இதில், ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியால் ஏற்படும் முன்விரோதத்தின் நிகழ்வுகளை கொண்ட கதைகளமாக இப்படம் தயாராகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *