Electrocution: மின்சாரம் தாக்கி குழந்தைகள் பலி!

Advertisements

உத்திரபிரதேசத்தில் மின்விசிறி அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்திரப்பிரதேசம் பாரசக்வார் காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் சரோஜ் என்பவரது நான்கு குழந்தைகள் மயன்க், ஹிமான்ஷி, ஹிமான்க் மற்றும் மான்சி ஆகியோர் வீட்டில் மின்விசிறி அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது மின்சாரம் கசிந்து அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது தாக்கியுள்ளது. அந்த நான்கு குழந்தைகளும் உயிரிழந்தனர்.இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *