Ivana: திரில்லர் படத்தில் முக்கிய வேடம்!

Advertisements

நடிகை இவானா நடித்துள்ள ‘மதிமாறன்’ திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.

சென்னை: ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் நடித்துள்ள படம் ‘மதிமாறன்’. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் இவானா பேசும்போது, ‘எனக்காகவே இந்தக் கதையை எழுதியதாக இயக்குநர் சொன்னபோது, இதில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். படத்தின் கதையும் என்னை இதில் நடிக்கத் தூண்டியது’ என்றார். இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பாடி ஷேமிங் எந்த வகையில் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான கதையை இப்படத்தில் சொல்கிறார்கள். இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது திரைவெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை பாபின்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *