IT Raid: 40 இடத்தில் சோதனை!

சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு கூடுதலாகச் சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தச் சோதனை நடப்பது வழக்கம்.

இந்த நிலையில், சென்னையின் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர் ஏற்கனவே மின்சாரத்துறையில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *