தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது- முதலமைச்சர்!

Advertisements

சென்னை:

தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கார்பன் டேட்டிங் ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இரும்பு காலத்தின் கார்பன் டேட்டிங் ஆதாரங்களை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது சிந்து நாகரீகத்தைவிட நம்முடைய நாகரீகம் மூத்தது என்று காட்டும் விதங்களில் உள்ள இரும்பு காலத்தின் கார்பன் டேட்டிங் ஆதாரங்களை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

கீழடி இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்விலேயே முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்துள்ள போஸ்டில், இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டுக் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் வருக.

உலகின் மூத்த முன்னோடி நாகரீகம் தமிழ்தான் என்பதற்கு சான்றாகக் கீழடி வளர்ந்து நிற்கிறது. அங்குத் தோண்ட தோண்ட புதிய கண்டுபிடிப்புகள், வரலாற்று சான்றுகள் இதை உறுதிப்படுத்துகிறது.

மிகச் சிறப்பான நாகரீகம் அமைத்து அங்குத் தமிழர்கள் வாழ்ந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல முன்னேறி நாடுகளின் நாகரீகத்தையே விடத் தமிழர்களின் நாகரீகம் பல மடங்கு முன்னேறி இருந்தது கீழடி ஆய்வுமூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்குச் செய்யப்பட ஆய்வுகள்மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள், தாழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் ஆகும்.

கீழடி, இந்தப் பெயர் தமிழக வரலாற்றைப் பல அடி உயரங்களுக்கு மேலே கொண்டே செல்லப் போகிறது. கீழடியில் இதுவரை கிடைத்த தொல்பொருட்கள் எல்லாம் உலகிலேயே மிகவும் பழமையான தொல்பொருள்களில் ஒன்று.

இந்தத் தொல்பொருட்களை சரியாக ஆராய்ச்சி செய்தாலே பல இனங்களில் வரலாற்றை மாற்றி எழுதி முடியும். இந்தக் கீழடி ஆராய்ச்சி தொடங்கியது என்னவோ 2015ல் தான். ஆனால் தொடக்கத்தில் இருந்தே இதில் பல ஆச்சர்யங்கள் ஆராய்ச்சியாளர்களுக்குக் காத்திருந்தது.

இந்தியாவில் எங்குமே கிடைக்காத அரியவகை பொருட்கள் இங்குக் கிடைத்தது. குறைந்தபட்சம், இந்தப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட காலம் கிமு 2ம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இதுவரை 6000க்கும் அதிகமான தொல்லியியல் சார்ந்த பொருட்கள் கிடைத்து இருக்கிறது. பாரசீக பாசி குறியீடு ஓடுகள் நிறைய கிடைத்து இருக்கிறது. நேர்த்தியான முறையில் கட்டமைக்கப்பட்ட கழிவுநீர்கால்வாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்கூடங்கள் செயல்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுகிறது.

அதேபோல் அங்கு வீடுகள் இருந்ததற்கான அடையாளமும் இருந்துள்ளது. அதேபோல் இங்குப் பல கோடி மதிப்பில் தங்கங்களும் காணப்பட்டு இருக்கிறது. 16 மீட்டர் தோண்டிய பின் இந்தத் தங்கம் கிடைத்துள்ளது.

50க்கும் அதிகமான சிறு சிறு ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கே கண்டுபிடிக்கப்பட்டு இரும்புகளில் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் முடிவுகளையே முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டு உள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *