Injambakkam Government Hospital: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியல்!

மருத்துவரின் தவறான சிகிச்சையால் முதியவர் உயிரிழந்ததாகக் கூறி ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ecr சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

சென்னை கிழக்கு கடற்க்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் மீனவ குப்பத்தை  சேர்ந்தவர்  சடையாண்டி (70) இவர் அவருடைய இருச்சக்கர வாகனத்தில்  செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால் சாலையில் உள்ள மின்கம்பத்தில் மோதி  மயக்கம் ஏற்பட்டு சாலையில் விழுந்துள்ளார். இதில் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஈஞ்சம்பாக்கம்  அரசுபுறநகர் மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதனை செய்ய மருத்துவர் இல்லாததால் நீண்ட நேரம் காத்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்து மருத்துவர்   cpr  முதலுதவி செய்துள்ளார். சடையாண்டிக்கு  வாயில் இரத்தம்  வரவே வேறு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல வேண்டும் உறவினர்கள் தெரி வித்துள்ளனர், ஆனால் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லையெனக் கூறப்படுகிறது.

அப்பொழுது  அவசர சிகிச்சையுள்ள ஆம்புலன்ஸ் வேறொரு நோயாளியை ஏற்றிச் சென்றுள்ளது. மேலும் உடனடியாகப் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அரசு ஆரம்மம சுகாதார நிலைய  அவசர ஊர்திக்குத் தகவல் அளித்துள்ளனர், 2 மணி நேரத்திற்கு பிறகு மருத்துவர் அவரை எங்களால் காப்பாற்ற முடிய வில்லையெனக் கூறி உள்ளனர்.

இதனால் ஆதிரம் அடைந்த உறவினர்கள்  மருத்துவரைச் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வாக்கு வததில் ஈடு பட்டனர் இதை அறிந்து வந்த நீலாங்கரை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி இறந்தவரின் உறவினர்களைக் கலந்து செல்லுமாறு வலியுறுத்தினார், பின்னர் சடையாண்டி உடலைப் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்,

மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் சடையண்டி உயிர் இறந்ததாகக் கூறி சமந்தா பட்ட மருத்துவர் மற்றும் செய்விலியர்களை கைது செய்ய வேண்டும் என்றும் 10 இல் 2 பேர் தான் உயிருடன் வருகிறார்கள் இப்படியொரு மருத்துவமனை எங்களுக்கு வேண்டாம் என்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். , நீலாங்கரை போலீசார் பேச்சி வார்த்தை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி அளிததின் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர், இதனால் ஈஞ்சம்பக்கம் ecr சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *