Plane crash: இந்திய கோடீஸ்வரர் பலி!

Advertisements

விமான விபத்தில் இந்திய கோடீஸ்வரர்  உட்பட 6 பேர் பலி!

ஜிம்பாப்வேயில் நடந்த விமான விபத்தில் இந்திய கோடீஸ்வரரும் சுரங்க அதிபருமான ஹர்பால் ரந்தாவா மற்றும் அவரது 22 வயது மகன் அமர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இந்தக் கோர விபத்து நடந்துள்ளது. அவர்கள் தங்கள் சொந்த விமானத்தில் தென்மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ள வைரச் சுரங்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தங்கம், நிலக்கரி, நிக்கல் மற்றும் தாமிரத்தை சுத்திகரிக்கும் ரியோ ஜிம் (RioZim) சுரங்க நிறுவனத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா. ரந்தாவா 4 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகத்தை மேற்கொண்டுவரும் ஜெம் ஹோல்டிங்ஸ் (GEM Holdings) நிறுவனத்தையும் நிறுவியுள்ளார்.

ரியோஜிம் நிறுவனத்தின் செஸ்னா 206 விமானத்தில் ரந்தாவாவுடன் அவரது மகன் அமர் உள்பட 6 பேர் பயணித்துள்ளனர். அவர்கள் ஹராரேயிலிருந்து முரோவா வைரச் சுரங்கத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. ஒற்றை எஞ்சின் கொண்ட விமானம் முரோவா டயமண்ட்ஸ் சுரங்கம் அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *