
சென்னை: இந்தியாவில் சாம்சங் கேலக்சி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்தப் போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘ஏ’ வரிசையில் ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. ஆறு இயங்குதள அப்டேட் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்டை இந்தப் போனில் வழங்குவதாகச் சாம்சங் உறுதி அளித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்
6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே
மீடியாடெக் டிமான்சிட்டி 6300 ப்ராசஸர்
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
ஆண்ட்ராய்டு 20 வரை இந்தப் போனை அப்டேட் செய்து கொள்ளலாமெனச் சாம்சங் தெரிவித்துள்ளது,
50+5+2 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
13 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
8ஜிபி ரேம்
128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்

5,000mAh பேட்டரி
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இந்தப் போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை
மூன்று வண்ணங்களில் இந்தப் போன் வெளிவந்துள்ளது
இதன் விலை ரூ.18,999 முதல் ஆரம்பமாகிறது.

