India – Pakistan: ஒரே ஒரு கிராமத்திற்காக 12 கிராமங்களைப் பாகிஸ்தானுக்கு வழங்கிய இந்தியா!

Advertisements

பறந்து விரிந்த இந்திய நிலப்பரப்பில் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆனால் ஒரு கிராமத்திற்காக இந்தியா 12 கிராமங்களைப் பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம் உண்மை தான். அந்தக் கிராமத்தின் பெயர் ஹூசைனிவாலா. இந்தக் கிராமம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஷத்ரு நதியின் மறுபுறம் ஹூசைனிவாலா மற்றும் கந்தா சிங் வாலா என இரண்டு கிராமங்கள் உள்ளன. இவற்றின் ஹூசைனிவாலா இந்தியாவிலும்  கந்தா சிங் வாலா பாகிஸ்தானிலும் உள்ளன.

சுதந்திரத்திற்கு முன்பு ஹுசைனிவாலா கிராமம் பாகிஸ்தானின் வசம் சென்றது. ஆனால் இந்தியா அதை விரும்பவில்லை. இதன் காரணமாக அந்த ஒரு கிராமத்திற்கு பதிலாகப் பஞ்சாபின் 12 கிராமங்களைப் பாகிஸ்தானுக்கு தந்தது இந்தியா.

ஷத்ரு நதிக்கரையில் உள்ள இந்தக் கிராமத்திற்கு, புகழ்பெற்ற பீர் குலாம் ஹூசைனிவாலாவின் நினைவாகப் பெயர் வைக்கப்பட்டது. இங்குள்ள வளாகத்தில் அவரது கல்லறை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கிராமத்திற்கு அடுத்தப்டியாகப் பாகிஸ்தானின் கந்தா சிங் வாலா கிராமம் உள்ளது. பிரிட்டிஷ் ராணுவத்தின் துணிச்சலான இந்திய சீக்கிய வீரரான கந்தா சிங் தத்தின் நினைவாக இந்தக் கிராமத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஹூசைனிவாலா கிராமத்திற்கு இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மற்றொரு முக்கிய பங்கு உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரின் உடல்கள் லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்ட மறுநாள், 1931 மார்ச் 23 அன்று மாலை ஹுசைனிவாலா கிராமத்தில் உள்ள ஷத்ரு நதிக்கரைக்கு பிரிட்டிஷ் படைகளால் தகனம் செய்வதற்காக இரகசியமாகக் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த ஹுசைனிவாலா கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஷத்ரு நதிக்கரையில் உள்ள ஹுசைனிவாலாவின் சுடுகாட்டில் கூடினர். பல கிராம மக்கள் ஒன்று கூடுவதைக் கண்டு, மூன்று புரட்சியாளர்களின் உடலை விட்டுப் படைகள் தப்பி ஓடியபின்னர், கிராம மக்கள் மூன்று தேசபக்தர்களையும் அங்கு மரியாதையுடன் தகனம் செய்தனர்.

இன்றும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று, பஞ்சாபின் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்தக் கிராமத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரின் கல்லறைகளுக்கு மக்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *