India national football team: முன்னாள் கேப்டன் மரணம்!

India national football team | Mohammed Habib

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபிப் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் மரணம் அடைந்தார்…

புதுடெல்லி: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபிப் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. அவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

1970-களில் இந்தியாவின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக விளங்கிய முகமது ஹபிப் பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், முகமதன் ஸ்போர்ட்டிங் ஆகிய புகழ்பெற்ற கால்பந்து கிளப்புகளிலும் விளையாடி உள்ளார்.

1977-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் மோகன் பகான் மற்றும் கால்பந்து ஜாம்பவான் பீலே உள்ளிட்டோர் அடங்கிய நியூயார்க் காஸ்மோஸ் கிளப் அணிகளுக்கு இடையே நட்புறவு கால்பந்து போட்டி நடந்தது. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

மோகன் பகான் அணியில் கோல் அடித்த இருவரில் முகமது ஹபிப்பும் ஒருவர். போட்டி முடிந்ததும் அவரைப் பீலே வெகுவாகப் பாராட்டினார். ஸ்பெயின் இந்திய அணிக்காக 35 ஆட்டங்களில விளையாடி 11 கோல்கள் அடித்துள்ளார். ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறார். அவரது மறைவுக்கு இந்திய கால்பந்து சம்மேளனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *