
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் நாள் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்குத் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று கட்சிகளும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளன எனத் தகவல் வெளியாகிவுள்ளது.


