Advertisements

பாஜக ஆட்சிக்கு வருமுன் 2700 கிலோமீட்டர் தொலைவுக்கு இருந்த உள்நாட்டு நீர்வழித்தடங்கள், இப்போது ஐயாயிரம் கிலோமீட்டர் நீளமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 51 ஆயிரத்து 236 பேருக்கு ஒரேநாளில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்குக் காணொலி மூலம் நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், புதிதாகப் பணி நியமனம் பெற்றவர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டுப் பாதுகாப்பையும் வலுப்படுத்துதல், நவீன உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், தொழிலாளர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகிய கடமைகள் உள்ளதாகத் தெரிவித்தார். பணியாளர்கள் மிகவும் நேர்மையாகப் பணியாற்றுவதே வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் இலக்கை அடைய உதவியாக இருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டுக்குமுன் ஆண்டுக்கு ஒரு கோடியே 80 இலட்சம் டன் சரக்குப் போக்குவரத்து உள்நாட்டு நீர்வழித்தடங்கள் வழியாக நடந்ததாகவும், இந்த ஆண்டு 14 கோடியே 50 இலட்சம் டன் என்னுமளவுக்கு அது உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.