இசைஞானி இளையராஜா தலைமையில் அவரது அலுவலகத்தில் தனது காதலியைக் கரம் பிடித்தார் பாடகர் தெருகுரல் அறிவு.
தமிழ் சினிமாவின் முன்னணி ராப் பாடகர்களுள் ஒருவர் அறிவு. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான எஞ்சாய் என்சாமி என்ற பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இப்பாடலை அறிவு எழுதித் தீ மற்றும் அறிவு இணைந்து பாடினர். இப்பாடல் இதுவரி யூ டியூபில் 503 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பாடலின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி ரெய்டு பாடலைப் பாடினார், மாமன்னன் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபத்தின் பாடலான கோல்டன் ஸ்பாரோ பாடலைப் பாடிருந்தார். இது தவிர்த்துப் பல திரைப்பட பாடல்களுக்குப் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
காஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற இசை குழுமத்தில் ஒரு உறுப்பினராவார். தெருக்குரல் மற்றும் வள்ளியம்மா பேராண்டியென இரண்டு இண்டெபெண்டண்ட் ஆல்பம் பாடல்களை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் தெருக்குரல் அறிவு அவரது நீண்ட நாள் காதலியான கல்ப்பனாவை இன்று கரம் பிடித்தார். இத்திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராகத் தொல்.திருமாவளவன் மற்றும் இளையராஜா கலந்துக் கொண்டனர். திருமண நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.