ICC Men’s T20 World Cup:அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுக்கப்போவது இவர்கள்தான் – இயன் பிஷப் கணிப்பு!

Advertisements

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்தப்போகும் வீரர்கள்குறித்து தனது கணிப்பினை இயன் பிஷப் கூறியுள்ளார்.

புதுடெல்லி:20 அணிகள் பங்கேற்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்குத் தயாராகும் விதமாகத் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஐ.சி.சி. தொடர்களில் அசத்தலாகச் செயல்படும் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன் இந்தியா ஆகிய அணிகள்மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த நிலையில் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடப் போகும் வீரர்கள்குறித்து கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வீரருமான இயன் பிஷப் கணித்திருக்கிறார்.

நடப்பு தொடரில் அதிக ரன்கள் எடுக்கப்போகும் வீரர் யார்? என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இயன் பிஷப், விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார், பாபர் அசாம் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரையும் கூறவில்லை. மாறாக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தான் அதிக ரன்கள் எடுக்கப் போகிறார் என்று அவர் கணித்திருக்கிறார்.

இதைப் போன்று அதிக விக்கெட் எடுக்கப் போகும் வீரர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், இந்திய அணியில் பும்ரா தலைசிறந்த பவுலராக இருக்கலாம். சாஹல், டி20 உலகக்கோப்பையில் கம் பேக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை குல்தீப்தான் வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுக்கப் போகும் வீரர் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *