
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தின் வாயிலாக அழுத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
இது தொடர்பாக அவர் இட்ட பதிவில், “நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி. ஆனால், நாங்கள் இண்டியா தான். நாங்கள் மணிப்பூரின் காயங்கள் ஆற உதவுவோம். நாங்கள் மணிப்பூர் பெண்கள், குழந்தைகளின் கண்ணீரைத் துடைப்போம். நாங்கள் மணிப்பூரின் அனைத்து மக்களுக்கும் அன்பையும், சமாதானத்தையும் மீட்டுக் கொடுப்போம். இந்தியா என்பதன் கருத்தியலை நாங்கள் மணிப்பூரில் மீள்கட்டமைப்போம்” என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

