
தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழையாலும் வெள்ளப்பெருக்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை இறுதிக்கட்டமாகத் தில்லி, பஞ்சாப், இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது.
இதனால் தில்லியில் யமுனை ஆற்றில் பாலத்தின் தளத்தைத் தொடும் அளவுக்கு அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. யமுனை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான வேறிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆற்றுவெள்ளத்தாலும், நாள்தோறும் அடை மழை பெய்வதாலும் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் கால்வாய்போல் வெள்ளம் பாய்கிறது. இதில் வாகனங்கள் மிதந்து நீந்தியபடி மெதுவாகச் செல்கின்றன.
அப்பகுதியில் இருந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு வேறிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தில்லியில் யமுனை ஆற்றில் உள்ள பழைய புதிய ரயில் பாலங்களின் அடிப்பகுதியைத் தொட்டு வெள்ளம் பாய்கிறது.
தில்லி மயூர் விகாரில் தற்காலிகத் தங்குமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்குள்ளும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் உச்சயினியில் ஆற்றின் கரையில் உள்ள படித்துறைகள் சிறிய கோவில்கள் ஆகியவற்றை மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது.

