
மாட்டு கொட்டகைக்குள் புகுந்த யானை பார்த்த “போச்சாமி” “மாடுகள் மிரள்கிறது”எனக் கொஞ்சி பேசி யானையை விரட்டும் செல்போன் காட்சிகள் சமூக வளை தளங்களில் பரவி வருகிறது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வருகிறது.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகிறது.இதே போன்று கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் வனத்துறையினர் வாகனங்கள்மூலம் வனப்பகுதிக்குள் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பி வருகின்றனர்.
எனினும் உணவு பற்றாக்குறை உள்ளதால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருவது தொடர்கிறது குறிப்பாக மதுக்கரை, போளுவாம்பட்டி, தடாகம், மருதமலை வனப் பகுதிகளில் உள்ள யானைகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் புகுந்து வருகிறது.மேலும் விவசாய பயிர்களைச் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீடுகளை உடைத்து உள்ள இருக்கும் அரிசி, மாட்டு தீவனங்களை சாப்பிட்டு வருகிறது.
இந்நிலையில் போலுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட காருண்யா அருகே உள்ள சப்பானிமடை பகுதியில் நேற்று இரவு ஒற்றை யானை புகுந்தது அங்கிருந் விவசாய நிலத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களைச் சாப்பிட்டது.பின்னர் அங்கு இருந்த மாட்டு கொட்டகைக்குள் புகுந்து அங்கிருந்து புண்ணாக்கு மூட்டையை தூக்கி சென்றது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் சைரன் ஒலி எழுப்பி யானையை அங்கிருந்து வனப் பகுதிக்குள் விரட்டினர் இதனிடையே மாட்டு கொட்டகைக்குள் புகுந்த யானை பார்த்த “போச்சாமி” “மாடுகள் மிரள்கிறது”எனக் கொஞ்சி பேசி யானையை விரட்டும் செல்போன் காட்சிகள் சமூக வளை தளங்களில் பரவி வருகிறது.


