ஹெல்தியான தினை அரிசி வெஜிடபிள் பிரியாணி!

Advertisements

டேஸ்ட் மற்றும் ஹெல்தியான தினை அரிசியிலும் பிரியாணி செய்யலாம், எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

சிறுதானிய உணவுகள் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காகச் சிறுதானிய உணவுகளை அன்றாட சமையலில் பயன்படுத்தி சாப்பிட்டும் வர்றாங்க.

பொதுவா சிறுதானியங்கள வச்சு கஞ்சி, தோசை, சிறுதானிய புட்டு இது மட்டும் தான் பெரும்பாலும் செய்றாங்க. ஆனா சிறுதானியத்துல முக்கியமானது தினை.

அந்தத் தினை அரிசியில் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

தினை அரிசி – 1 கப்,

தண்ணீர் – 3 கப்,

நெய் – 2 ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

நறுக்கிய காய்கறிகள் – அரை கப்(கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு),

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்,

புதினா சிறிதளவு,

கிராம்பு – 4,

இலவங்கப்பட்டை – 1,

அன்னாசி பூ – 1,

சீரகம் – கால் ஸ்பூன்,

பிரியாணி இலை -1,

ஏலக்காய்-2.

செய்முறை:

தினை அரிசியை நன்றாகக் கழுவி, வெதுவெதுப்பான நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் கிராம்பு, ஏலக்காய் உட்பட அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து அவை வெடிக்கும் வரை வதக்கவும்.

அதன்பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதன்பின் காய்கறிகள் மற்றும் புதினாவைச் சேர்த்து, 3 முதல் 4 நிமிடங்கள், பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன்பின் தண்ணீரை ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

தினை அரிசியை வடிகட்டி அதைக் கொதிக்கும் நீரில் சேர்க்கவும். -அரிசி முழுமையாக வேகும் வரை நடுத்தர முதல் குறைந்த தீயில் சமைக்கவும்.

தண்ணீர் நன்கு வற்றும் வரை கலவையை நன்கு கிளறி விடவும். தினை அரிசி நன்கு வெந்ததும் உப்பு பார்த்து அடுப்பை அணைக்கவும். அடுப்பை அணைத்தவுடன் இறுக்கமான மூடிப் போட்டு 7 நிமிடம் மூடி வைக்கவும்.

இப்போது சூடான தினை அரிசி வெஜிடபிள் பிரியாணி ரெடி.

தயிர் வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பர் டேஸ்டா இருக்கும்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *