
11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு; புதிய அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு தேதிகள் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 7-ஆம் தேதியிலிருந்து 12-ஆம் தேதி வரை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் தேதியை ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 மற்றும் 4 -ஆம் தேதிகளில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த சூழ்நிலையில் , மிக்ஜாம் புயலின் தாக்கம் சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் அதிகமாக இருந்தது.
தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. படிப்படியாக நிலைமை சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் தற்போது பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் நலன் கருதி 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைத்துள்ளது. மாணவர்களால் குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராக முடியாது என்பதால் டிசம்பர் 7முதல் 12- ஆம் தேதி வரை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது கல்வித்துறை.
மேலும் புதிய அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

