
உயர் ரத்த அழுத்தம் தானாகவே சீரடைய நாம் செய்ய வேண்டியது ஹலாசனா!
பொதுவாகவே நாம் தினமும் அதிகாலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்தால், அந்நாள் முழுவதும் உடலும், மனமும் லகுவாக சுறுசுறுப்பாகவும் இருக்கும். அதுவும் யோகாசனங்களை செய்தால், உடல் நன்கு கச்சிதமாக இருப்பதோடு, மன அழுத்தங்கள் குறைந்து, செய்யும் செயல்களை முழு ஈடுபாட்டுடன் செய்யலாம். நாம் தினமும் ஒரு யோகாசனம் குறித்து காண்கிறோம்.
இன்று நாம் ஹலாசனம் குறித்து பார்ப்போம். யோகாசனங்களில் ஹலாசனம் சற்று கடினமான, அதே சமயம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய ஆசனமாகும். இந்த ஆசனம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக இது அடிவயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இந்த ஆசனம் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் சமமான அளவில் நன்மைகளை வழங்குகிறது. முக்கியமாக இந்த ஆசனம் அடிவயிறு மற்றும் முதுகு தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. ‘
ஹலாசனம் செய்முறை;
முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
பின் மூச்சை உள்ளிழுத்த படி, இரண்டு கால்களையும் ஒன்றாக மேலே உயர்த்த வேண்டும்.
இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வைத்திருக்க வேண்டும்.
பின் கால்களை மெதுவாக தலைக்கு மேல் உயர்த்து, முதுகை வளைத்து பாதங்களை தலைக்கு பின்புறத்தில் உள்ள தரையைத் தொட முயற்சிக்க வேண்டும்.

இந்நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிட வேண்டும். * பின்பு மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
இந்த ஆசனத்தை 3-5 முறை செய்யலாம்.
இந்த ஆசனத்தை காலை அல்லது மாலை என எந்த வேளையிலும் செய்யலாம்.
இந்த ஆசனத்தை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
இந்த ஆசனத்தை நிபுணரின் மேற்பார்வையில் மட்டுமே முதன்முதலாக செய்பவர்கள் செய்ய வேண்டும்.
இந்த ஆசனம் செய்வதாக இருந்தால், அதுவும் உணவு உண்ட பின் செய்வதாக இருந்தால், குறைந்தது 5-6 மணிநேரம் கழித்து தான் செய்ய வேண்டும்.
முக்கியமாக இந்த ஆசனம் செய்யும் போது, எடையை தோள்பட்டையில் தான் சுமக்க வேண்டுமே தவிர, கழுத்தில் சுமக்கக் கூடாது.
ஹலாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்;
ஹலாசனம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
தைராய்டு பிரச்சனைகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
தூக்கமின்மை பிரச்சனையை போக்கும்.
எடை இழப்பிற்கு உதவும்.
உடலின் நெகிழ்வு தன்மை அதிகரிக்கும்.
தலைவலி பிரச்சனையை குறைக்கும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
யாரெல்லாம் ஹலாசனம் செய்யக்கூடாது?
மூட்டு லவி, சியாட்டிகா, கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
உயர் இரத்த அழுத்த நோயாளிகள், முதுகு வலியைக் கொண்டவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
கர்ப்பிணிகளும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இந்த ஆசுனத்தை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமா அல்லது பிற சுவாச நோய்களைக் கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
உங்களால் பின்புறத்தில் உள்ள தரையைத் தொட முடியாவிட்டால், இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.



