Guinness World Records: நீங்க என்ன வளக்குறது.. நாங்களும் வளர்ப்போம்லா…

உத்திரப்பிரதேசத்தில் 15 வயதே நிம்பிய சிறுவன், உலகின் நீளமான தலைமுடி வைத்திருப்பதற்கான கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்…

கின்னஸ் சாதனை படைக்கும் பலரைப் பற்றி நாம் சமூக வலைதளங்களின் மூலம் அறிந்திருப்போம். ஏதாவது வினோதமான முயற்சி செய்து சாதனை படைப்பது தற்போது ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது. அதே போன்று 15 வயது சிறுவன் செய்த கின்னஸ் சாதனை சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அந்தச் சிறுவனின் பெயர் சிதக்தீப் சிங் சாஹல், அவர் தனது வாழ்நாளில் முடி வெட்டிக்கொண்டதே இல்லை. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன், பதின்ம வயது பெண்களைவிட மிக நீளமான கூந்தலை வைத்துக் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சிதக்தீப் பின் சாதனையைக் கின்னஸ் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் செப்டம்பர் 14-ம் தேதி அன்று பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் கூறும்போது, ‘என்னுடைய தலைமுடி மிகவும் நீளமாக, அடர்த்தியாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அவர்களின் தலைமுடி அப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நான் சீக்கிய மதத்தைச் சார்ந்தவன்.

இது கடவுளின் பரிசு. சீக்கிய மதத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, தலைமுடியை பராமரிப்பது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *