
ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,030-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனையானது.
செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,010-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,940-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,520-க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது முறையாக தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. தற்போது கிராமுக்கு ரூ.285 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,725-க்கும், சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது.
வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.



