ஒரே நாளில் 2 முறை தாறுமாறாக எகிறிய தங்கம் விலை.. சென்னையில் சவரனுக்கு ரூ.1480 உயர்வு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் மீண்டும் ரூ.960 அதிகரித்துள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 அதிகரித்துள்ளது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் நேற்று ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 480 குறைந்தது. கடந்த 5 நாட்களில் ரூபாய் 2,680 விலை குறைந்திருந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வந்தது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.57,200 ஆக இருந்தது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக உயர்வைக் கண்டு வந்தது தங்கம் விலை.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய வரி விதிப்புகளால் உலக நாடுகளிடையே பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. பங்குசந்தைகளில் ஏற்படும் சரிவு காரணமாக அனைவரும் பாதுகாப்பான முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *