குட் பேட் அக்லி விமர்சனம்.. சொல்லி அடித்த ஆதிக்.. அஜித்தை வைத்து மாஸ் சம்பவம்!

Advertisements

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, சுனில், ஜாக்கி ஷெராஃப், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தற்போது வரை 40 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் பெற்று யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் அசத்தி வருகிறது. இதன் மூலம் அஜித் படங்களில் அதிக வியூஸ் பெற்ற டிரைலர் என்ற சாதனையை குட் பேட் அக்லி நிகழ்த்தியது. மேலும் இப்படத்தின் முன்பதிவு அசத்தி வருகிறது. படத்தின் கதையை பொறுத்தவரையில், கேங்ஸ்டராக இருக்கும் அஜித் குமார், தனது மனைவி த்ரிஷா சொன்ன காரணத்திற்காக ஜெயிலில் 18 ஆண்டுகள் இருக்கிறார்

. தனது மகனின் 18 வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என ஜெயிலரின் உதவியுடன் முறைப்படி ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். இந்த சமயத்தில் ஸ்பெயினில் உள்ள மகனை யாரோ கடத்தி விடுகிறார்கள். அதன் பின்னர்தான், அஜித்தின் மகனை போதைப்பொருள் வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. அஜித்தின் முன் பகையாளர்கள் தான், தனது மகனை இப்படி சிக்க வைத்துள்ளார் என த்ரிஷா கூறுகிறார். ஆனாலும் இதற்கு காரணம் யார்? அவர்களுக்கும் நமக்கும் என்ன முன்பகை என்பதைக் கண்டுபிடித்து, ஜெயிலில் அடைக்கப்பட்ட தனது மகனை மீட்டாரா என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் திரைக்கதையை பொறுத்தவரையில் முதல் பாதியில் பல்வேறு கோணங்களில் பயணிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. முதல் பாதியில் உள்ள பல காட்சிகளில் இருந்த பில்டப்கள் எல்லாம் டயலாக்கில் இருக்கிறது. படம் மெல்ல மெல்ல எலிவேஷன் ஆகி ஃபுல் ஆக்‌ஷன் மோடுக்கு மாற்றியதற்கு ஆதிக்கிற்கு தனி பாராட்டுகள். குட் மோடில் இருக்கும் காட்சிகள் ரசிகர்களுக்காக அஜித் சொல்ல நினைக்கும் விஷயங்களையே டயலாக்காக வைத்துள்ளது ரசிக்க வைக்கிறது.

அதே போல் பேட் மற்றும் அக்லி ஆகிய போர்ஷன்களில் தான் அஜித் ரசிகர்களுக்கான மொத்த ட்ரீட்டும் உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் எந்த அளவுக்கு வெறித்தனமான அஜித் ரசிகர் என்பதை இந்த படத்தின் மூலம் காட்டியுள்ளார். திரைக்கதையில் அவர் செய்துள்ள மேஜிக், அஜித் ரசிகர்களுக்கு விருந்து தான். இது மட்டும் இல்லாமல் உலக அளவில் கவனிக்கப்படும் சினிமா கதாபாத்திரங்களான கொரியன் டான் லீ, மணி ஹைஸ்ட் பிரஃபசர், ஜான் விக் உள்ளிட்டவற்றுடன் சொல்லப்பட்ட காட்சிகளுக்கு மாஸ் ரெஸ்பான்ஸ். ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்கள் அப்லாஸ்களை அள்ளுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *