மீண்டும் மீண்டும் தங்கம் விலை குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்றும் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது நகைப் பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் அதிரடியாகக் குறைந்து வருகிறது.

நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 6935க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 80 ரூபாய் குறைந்து 55,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *