Gold Price Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா.?

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள்மீதான சுங்க வரி 15 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதையடுத்து தங்கம் விலையானது கிடு, கிடுவெனக் குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்திற்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வம்

தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடையே அதிகம் உள்ளது. குறிப்பாகத் தங்கத்தில் அதிக அளவு முதலீட்டு பொருளாக வாங்கி வைக்கின்றனர். மேலும் தங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும் தங்கம் வாங்கும் இல்லத்தரசிகள் இந்தியாவில் அதிகமாக உள்ளனர். இதன் காரணமாகவே தங்கம் அதிக அளவு விற்பனையாகும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

தங்கத்தில் முதலீடு

இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை எவ்வளவு ஏறினாலும் அதன் விற்பனை மட்டும் இந்தியாவில் குறைவதில்லை.

இன்றைய நாட்களில் நிலத்திலும், தங்கத்திலும், தான் அதிக முதலீடு செய்யப்படுகிறது. இவ்வாறு முதலீடு செய்தால், வருங்காலத்தில் அதிக இலாபத்தைக் கொடுக்கும் என்பது பலருடைய எண்ணமாக உள்ளது.

தங்கத்தின் மீதான வரி குறைப்பு

இந்தநிலையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்பத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றம் காணப்பட்டு வருகிறது. மேலும் மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள்மீதான சுங்க வரி 15 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதை தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 3,360 குறைந்துள்ளது. இந்தநிலையில் தான் கடந்த சனிக்கிழமை அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் தங்கம் விலை உயர்ந்தது

ஏறிய தங்கம்- திடீரெனக் குறைந்தது

தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,465-க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.51,720-க்கு விற்பனையானது. இதனால் வரும் நாட்களில் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளதாகக் கருதப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் தங்கத்தின் விலை குறைந்து பொதுமக்களுக்கு இன்ப மகிழ்ச்சி கொடுத்துள்ளது.

ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது

அந்த வகையில் 22 கேரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 6,415 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 51,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெள்ளி விலை கிராமுக்கு 89.50 காசுக்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *