Girl Threatened & Raped: எஸ்கேப் ஆன வாலிபர்!

Advertisements

பள்ளிக்குச் சென்ற மாணவியைக் கத்தி முனையில் பலாத்காரம் செய்த நபரைப் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே ஒரு கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பல்வேறு மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பகுதிகளில் போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவ, மாணவியர் நடந்தும் சைக்கிளிலும் தான் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல 8ம் வகுப்பு மாணவி பள்ளிக்குத் தனியாகச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரெனப் பள்ளி மாணவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்கும் படி கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்தப் பள்ளி மாணவியை மிரட்டி வலுக்காட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து ஒரு வழியாகத் தப்பித்து வந்த பள்ளி மாணவி நடந்த சம்பவம் தொடர்பாகப் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை அடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *