ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது 30ஆம் தேதி நாளை முதல் செப்டம்பர் 17 ஆம் தேதிவரையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது…
அயர்லாந்துக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட கையோடு இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பை 2023 தொடருக்காக ரோகித் சர்மா தலமையிலான இந்திய வீரர்கள் இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது 30ஆம் தேதி நாளை முதல் செப்டம்பர் 17 ஆம் தேதிவரையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது.
முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் நடக்கிறது. இந்த நிலையில், ரோகித் சர்மா தலமையிலான இந்திய வீரர்கள் இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
ஆனால், கேஎல் ராகுல் மட்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக இலங்கைக்கு புறப்பட்டுச் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. பெங்களூருவில், கேஎல் ராகுல் மீது மட்டும் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கென்று அதிக நேரம் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தேர்வுத் தலைவர் அஜித் அகர்கர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெற மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என்றும் கூறியுள்ளார்.
பேக்கப் பிளேயராகச் சஞ்சு சாம்சன் இலங்கைக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார். ஆனால், கேஎல் ராகுல் மட்டும் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று அவர் கூறியுள்ளார்.
