தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்காக நடத்திய பாராட்டு விழாவை வேல்முருகன் கொச்சை படுத்தி பேசியதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தில் ராணி அகல்யா பாய் ஹோல்கரின் 300 வது பிறந்தநாளை ஒட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், ஊழல் அதிகரித்து வருவதால் 2026 ஆண்டில் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறினார். தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்காக நடத்திய பாராட்டு விழாவை வேல்முருகன் கொச்சை படுத்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
பெங்களூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தை குறிப்பிட்டு, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் மாநிலங்களில் என்ன நடந்தாலும் திமுக கண்டுகொள்ளாது என குற்றம் சாட்டினார்.


