கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்!
இந்த நிலையில் தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் சந்தேகிக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன.
அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிலோ கஞ்சா இருந்தது. லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 30), திருச்சியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும் தெரிந்தது.2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்டலங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.