இன்று வெளியாகிறது ‘கேம் சேஞ்சர்’ டிரைலர்!

Advertisements

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த ஆண்டு வெளியானது ‘இந்தியன் 2’. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கலை குறி வைத்து இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *