Gaganyan project: 3-ம் கட்ட சோதனை வெற்றி!

ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றி, சோதனை வெற்றிகரமாக நடந்ததால் இஸ்ரோ குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை:நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல் கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்திலிருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவை யான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ். 4 என்ஜின் ஆகியவை தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளில் மனிதன் விண்ணிற்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாதிரி என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

அதன்படி 3-வது கட்ட மாக 1,700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப் பட்டு நேற்று சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

இந்நிகழ்ச்சியில் மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் கலந்து கொண்டு நேரில் பார்வையிட்டார். திருவனந்தபுரம் திரவ இயக்கத் திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் திருவனந்தபுரத்திலிருந்து காணொலி காட்சி மூலமாகப் பார்வையிட்டனர்.

சோதனை வெற்றிகரமாக நடந்ததால் இஸ்ரோ குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் முதல் கட்டமாக 725 வினாடிகளும், 2-வது கட்டமாக 350 வினாடிகளும் வெற்றிகரமாகச் சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *