
பிரான்ஸ் விமான விபத்தில் காணாமல் போன போன 2 வயது குழந்தையை தேடும் இந்திய போலீசார் தேடி வருகின்றனர்.
குஜராத் போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்கவும், அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அடையாளம் காணவும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கழுதை விமானம்’ கதை நாளுக்கு நாள் இருண்டு வருகிறது. நிக்கராகுவாவுக்கு 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களை ஏற்றிச் சென்ற மனித கடத்தல் விமானத்தில், இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தையும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் போலீசார், காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்கவும், அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அடையாளம் காணவும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆகஸ்ட் 2, 2021 அன்று பிறந்த இளம் குழந்தை, கடத்தல்காரர்களால் திட்டமிட்டு கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். அமெரிக்க-கனடா எல்லையில் கைவிடப்பட்ட பல குழந்தைகளைப் போன்ற கதியை காணாமல் போன குழந்தையும் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, குஜராத் காவல்துறை சிஐடி அதிகாரி ஒருவர் கூறுகையில், “வடக்கு குஜராத்தில் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதால், குழந்தை மற்றும் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
குஜராத்தின் மெஹ்சானா மற்றும் காந்தி நகரைச் சேர்ந்த முகவர்கள் பெரும்பாலும் போலி குடும்பங்களை நிறுவுவதாகவும், சட்டவிரோதமாக குடியேறுவதற்கு வசதியாக வேறு ஒருவரின் குழந்தையை கடத்தி தம்பதிகள் போல வேடமிட்டு வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஆதாரத்தை மேற்கோள் காட்டி அந்த வெளியீடு செய்தி வெளியிட்டுள்ளது.
இது அமெரிக்காவின் உள்ளே சட்டவிரோதமாக நுழைவதற்கு கையாளப்படும் முறைக்கேடான செயலாகும். ஏனெனில் “குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மிக எளிதில் அமெரிக்கா உள்ளே நுழைய முடியும்.
மேலும் இரண்டு வயது குழந்தையுடன், 10 வயது சிறுவன் மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்கள் என, மூன்று ஆதரவற்ற சிறார்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அமெரிக்க தரவுகளின்படி, 2020 மற்றும் 2023 க்கு இடையில், 730 ஆதரவற்ற இந்திய சிறார்கள் அமெரிக்க எல்லைகளில் கைவிடப்பட்டனர், இது 2020 ஐ விட 233 சதவீதம் அதிகமாகும்.
துபாயில் ருமேனிய நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸ் இயக்கும் லெஜண்ட் ஏர்லைன்ஸின் ஏ340 விமானத்தில் 303 இந்திய பயணிகள் கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஏறினர். பிரான்ஸ் நாட்டின் வாட்ரி என்ற இடத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்ட அந்த விமானம், கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், 4 நாட்கள் தரையிறக்கப்பட்டது.
பின்னர், ஏ.எஃப்.பி படி, பயணிகள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் விமானத்தில் ஏறியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்கடத்தல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது என்பது சர்ச்சையாகியது குறிப்பிடத்தக்கது.

