
11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பராசபரமாக பிரிவதாக, நடிகையும்.. ஹேமா மாலினியின் மக்களுக்கான ஈஷா தியோல் மற்றும் அவரின் கணவர் பாரத் தக்தானி அறிவித்துள்ளது பல ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிரபல நடிகை ஹேமமாலினி மற்றும் தர்மேந்திரா நட்சத்திர ஜோடிகளின் மூத்த மகளான ஈஷா தியோல், 2002-ஆம் ஆண்டு ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானவர். பின்னர் ஹரித்திக் ரோஷன், ஷாருக்கான் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், தமிழிலும் ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார்.
2004-ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகிய மூன்று நடிகர்களை வைத்து, மல்டி ஸ்டார் படமாக எடுக்கப்பட்ட ‘ஆயுத எழுத்து’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஈஷா நடித்திருந்தார். இதை தொடர்ந்து, ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால் தமிழ் பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதை தொடர்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு பாரத் தக்தானி என்கிற இளம் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணம்… பாலிவுட் திரையுலகமே ஆச்சர்யப்படும் விதத்தில், மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த ஜோடிகளுக்கு ராத்யா மற்றும் மிராயா என இரண்டு மகள்களும் உள்ளனர்.
திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்ட பிறகும், சில படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலில் கவனம் செலுத்தி வந்த ஈஷா தியோல்… நேற்று தன்னுடைய விவாகரத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்த அறிக்கையில் “நாங்கள் பரஸ்பரம் மற்றும் இணக்கமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் வாழ்க்கையில் இந்த மாற்றத்தின் மூலம், எங்கள் இரண்டு குழந்தைகளின் நலன் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் முக்கியம் எனவே அவர்களுக்கு சிறந்த பெற்றோராக இருப்போம். எங்கள் தனியுரிமை மதிக்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
ஈஷா மற்றும் பாரத் விவாகரத்து பெற உள்ளதாக சில தகவல்கள் பாலிவுட் திரையுலகில் வட்டமிட்டு வந்தது. ஆனால் இதுகுறித்து ஈஷா தியோல் தரப்பில் இருந்தும் பாரத் தரப்பில் இருந்தும் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படாமல் இருந்தது. இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



