Seydunganallur: மனைவியை துடி துடிக்க  வெட்டி கொன்ற கணவன்!

Advertisements

மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடிவருகின்றனர்.

செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஆறாம்பண்ணை சர்ச் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மீனா தனது குழந்தைகளை இன்று காலை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டில் இருந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் அரிவாளால் மீனாவை சரமாரியாக வெட்டினார்.

இதில் மீனாவுக்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மீனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பால்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முறப்பநாடு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பால்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *