En Man, En Desam: தேசத்துக்காக உயிர் நீத்த வீரர்களின் நினைவாக டில்லியில் பூங்கா!

தேசத்துக்காக உயிர் நீத்த வீரர்களின் நினைவாக டில்லியில் பூங்கா அமைக்க என் மண் என் தேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 45 சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்  நீத்த வீரர்களின் நினைவாக நாட்டு மக்களை அவரவர் பகுதிகளில் இருக்கின்ற மண்ணை சேகரித்து சுமார் 7,500 கலசங்களில் அவற்றை பராமரித்து அதனுடன் மரச் செடிகள் வைத்து டில்லிக்கு அனுப்புமாறு  கோரிக்கை பிரதமர் மோடி வைத்தார்.

அதன் அடிப்படையில் நாட்டு மக்கள் அவரவர் பகுதிகளிலிருந்து  சுமார் 7,500 கலசங்களில் மண்களை சேகரித்து மரச்செடிகளுடன் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். அவற்றை ஒருங்கிணைத்து தேசிய போர் நினைவு சின்னம் அருகே அமுத பூங்கா அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதையடுத்து ஏராளமானோர் டெல்லிக்கு மரச்செடிகளை கொண்டு வந்தனர். மரச்செடிகளைக் கொண்டு வருபவர்களின் வசதிக்காக நாடு முழுவதிலும் இருந்து டில்லிக்கு 45 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியது.

என் மண் என் தேசம் நிகழ்ச்சி டில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமுத பூங்கா கடமைப் பாதையில் அமையும் என்றும் அறிவித்தார். இந்நிகழ்ச்சிக்காக டில்லிக்கு இயக்கப்பட்ட ரயில்களுக்கு சிறப்பு கலச யாத்திரை ரயில்கள் என்று பெயர் வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *