எதிர்கட்சி தலைவர்  ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு

மக்களவை எதிர்கட்சி தலைவர்  ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து, சட்டப்பேரவை தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதாக பதிலளித்துள்ளது-
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக மக்களவை எதிர்கட்சி தலைவர்  ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்நிலையில்  அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. இருப்பினும் தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டுக்கு சட்ட பேரவையின் ஆவணங்களை வெளியிட்டு நீருபிக்கும் மாறு சவால் விடுத்தார்.
இதையடுத்து மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் ஆவணங்களை வெளியிடத் தயார் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த முடிவிற்கு  ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது ஒரு நல்ல முதல் படி என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ஆவணங்கள் டிஜிட்டல் வடிவில் உள்ளதா அல்லது படிக்கும் வகையிலான ஆவணங்களான என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில வாரங்களாக தேர்தல் ஆணையத்திற்கும் ராகுல் காந்திக்கும் வார்த்தை போர் ஏற்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *