
முட்டை சேர்க்காமல் சுவையான கேக்.
அனைவரும் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு அருமையான சுவையான ரவை கேக் எப்படி செய்வது என்று தான் இந்தச் சமையல் குறிப்புகுறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். பொதுவாக ஓவன் இல்லாமல் கேக் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அது மிருதுவாக இருக்காது என்று கூறுவார்கள். அதே போல் தான் முட்டை சேர்க்காமல் கேக் செய்வதும். ஆனால் நாம் இப்பொழுது செய்யும் இந்த ரவா கேக்கில் முட்டையும் கிடையாது. அதைச் செய்வதற்கு ஓவனும் தேவையில்லை.
தேவையான பொருட்கள்:

சர்க்கரை – 1/2 கப்
பால் – 1/2 கப்
தயிர் – 1/4 கப்
ரீபைண்ட் ஆயில் – 1/4 கப்
ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன்

செய்முறை: ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ரவை, சர்க்கரை, பால், தயிர், ரீபைண்ட் ஆயில், ஏலக்காய் தூள் இவை அனைத்தையும் சேர்த்து 30 நொடிகள் அரைக்க வேண்டும். தயிர் சேர்க்க விருப்பமில்லாதவர்கள் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு பால் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம். பால் காய்ச்சி ஆர வைத்த பாலாக இருக்க வேண்டும். அரைத்த இந்த விழுதை ஒரு பவுலில் மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
இப்பொழுது கேக் தயார் செய்யும் கேக் ப்பேன் எடுத்துக் கொள்ளலாம். அந்தக் கேக் பாத்திரம் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் டிபன் பாக்ஸ் போன்ற அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன் உள் எண்ணையை நன்றாகத் தடவ வேண்டும். பிறகு அதன் மேல் மைதா மாவை தூவ வேண்டும். அப்பொழுதுதான் கேக் எடுக்கும்பொழுது சுலபமாக வரும். இந்தப் பாத்திரத்தில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் ரவை மாவை ஊற்றி நன்றாக லெவல் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு மறுபடியும் மூடிவிட வேண்டும். 25 நிமிடம் அடுப்பிலேயே குறைந்த தீயில் இருக்க வேண்டும். 25 நிமிடம் கழித்து ஒரு பல் குத்தும் குச்சியைப் பயன்படுத்தி அந்தக் கேக்கை குத்தி பார்க்க வேண்டும். குச்சியில் மாவு ஒட்டாமல் வந்துவிட்டால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம். இப்பொழுது பாத்திரத்தை வெளியே எடுத்து ஆர வைக்க வேண்டும்.

