Edappadi Pazhanisami:அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான்!

Advertisements

தஞ்சையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டது.

குறுவை சாகுபடி விவசாயிகளுக்குரிய இழப்பீடு வழங்கவில்லை. குறுவை விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கள்ளச்சாரயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்ட வேண்டுமென்ற ஒருவரை மத்திய ஜல்சக்தி இணையமைச்சராக்கி உள்ளனர்.

நீட் தேர்வு ரத்து குறித்த தமிழக எம்பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். 40 எம்பிக்களும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதுவரை அதிமுகவை காப்பாற்றியது யார் என்று சசிகலாவிற்கு, ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாகச் சசிகலா எப்படி சொல்கிறார். அதிமுகவில் எல்லா சாதியினரும், அனைத்து பொறுப்புகளிலும் உள்ளனர். அதிமுகவில் எந்தச் சரிவும் இல்லை.

தோல்வியைச் சந்திக்காத அரசியல் எது ? 3 ஆண்டுகள் விடுமுறையில் சென்றிருந்தார். இப்போது ரீ என்ட்ரி என்கிறார்.

2021ல் அரசியல் ஓய்வு எனக் கூறிய சசிகலா, இப்போது ஏன் வருகிறார்? இரட்டை இலையை எதிர்த்துப் போட்டியிட்ட ஓபிஎஸ்யை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்.

அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ். மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டவர் ஓபிஎஸ்.அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *