Edappadi Palanisami:வெற்றி, தோல்வியைவிட தன்மானம் தான் முக்கியம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. நான் எங்கு செய்தியாளர்களை சந்தித்தாலும், தமிழகத்தில் நடக்கின்ற பிரச்சினைகள் குறித்துதான் கேள்வி எழுப்புகின்றனர்.

அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இணக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் விரும்பினால் மட்டும் என்ன செய்வது ? வெற்றி தோல்வி என்பது வேறு, தன்மானம் தான் முக்கியம்.

அதிமுக தலைமையை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? அதிகாரத்திற்காக நாங்கள் அடிமையாக இருந்ததில்லை. எங்களுக்கென மரியாதை உள்ளது. தலைவரை பற்றி அவதூறு பேசுகிறார்கள்.

அண்ணாவை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மாற்றுத்திறனாளிகளிடம் மகாவிஷ்ணு நடந்துகொண்டது தவறானது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணு, திமுக அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படும்படி பேசியது கடும் கண்டனத்திற்குரியது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *