
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்த பின்னர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.


