கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றும் அவரது போதனைகளும் இந்திய கலாச்சாரம் மற்றும் தத்துவத்திற்கு உத்வேகம் அளிக்கின்றன. அவர் உண்மை, நீதி, கருணை மற்றும் சுயநலமற்ற செயல்களுக்கான பாதையைக் காட்டினார். இந்த புனிதத் திருநாளில், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் லட்சியங்களைத் தழுவி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ந்த இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.




