திமுக – பாஜக ரகசியக் கூட்டணி..? Delimitation-ஆல் கிளம்பும் பீதி.!

டிலிமிடேஷன் விவகாரத்தில் திமுக இறுதியில் என்னமுடிவெடுக்கப் போகிறது? பாஜகவுடன் திமுக இணக்கமாகவும், இனி வரும் காலங்களில் கைகோர்த்து செல்லுமா? அப்படி நடந்தால் தவெகவுக்கு என்ன DANDGER  ? காங்கிரஸ் இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்ளும்? என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் ஆகப்பெரும் கேள்வி.

தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் குசுகுசுனு முனுமுனுத்தாக செய்திகள்  வெளியாகியுள்ளது.  இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மானத்தையும் விட்டுபுட்டு எதிர்க்கட்சிகளுடன் பேசாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக பாஜக வாய்கூசாமல் கூறுகிறது.

இதை பொறுத்துக்கொள்ளதாத  காங்கிரஸ் பொறாமையில்  குற்றஞ்சாட்டிய நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்த தகவல் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது.  அதேநேரத்தில், கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கிரண் ரிஜிஜு  அடித்து சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து டிலிமிடேஷன் நடவடிக்கையை மத்திய அரசு எந்தளவுக்கு முன்னெடுத்து வருகிறது என்பதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.டிலிமிடேஷன் மூலம் நாளுமன்ற உறுப்பினர்களின்  தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், சட்டமன்ற உறுப்பினர்களின்   தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் ஏற்படும்.

தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டியிருப்பதால், 2027-ல் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், 2028-ல் நடைபெற வேண்டிய சட்டமன்றத் தேர்தல் ஆகியவை எப்போது நடைபெறும் என்ற கேள்வியும் எழுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் கீழ் இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்தும் முயற்சியும் இருக்கிறது.

அப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால்,  மாநிலப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படலாம், தேசியக் கட்சிகளுக்கு சாதகமான சூழல் உருவாகலாம், தமிழக அரசின் பதவிக்காலம் பாதிக்கப்படலாம், ஆட்சி கவிழ்ந்தால் தேர்தல் நடத்துவதில் சிக்கல், உள்ளாட்சித் தேர்தல்களுடன் ஒத்திசைப்பதில் சிக்கல் போன்ற என்னற்ற பாதிப்பகளை தமிழக அரசியலாளர்கள் சந்திக்ககூடுவோடு, ஒருவித பயம் கலந்த பீதி உருவாகும்.

இந்த சூழலில் திமுக எடுக்கும் முடிவு மிகவும் முக்கியமானது. திமுக நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தாலும் அது மறைமுக, தவெக ஆட்சியை கவிழ்க்க, பாஜகவுக்கு முட்டுக்கொடுக்க ஆதரவாகவே அமையும். அங்கேயே இருந்து வாக்களித்தாலும் நேரடி ஆதரவாக இருக்கும். இதனால் பாஜகவுக்கு ஆதரவளிக்கும் கட்சி திமுக என்ற அரசியல் முத்திரை கண்டிப்பாக விழும். இதுவரை பாஜக எதிர்ப்பை முன்னெடுத்து வந்த திமுகவுக்கு, இது அரசியல் சவாலாகவே இருக்கும்.

உள்ளாட்சி தேர்தலை வேகமாக நடத்தி, மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளில் தனது கட்சியினர் வெற்றி பெற வேண்டும் என்று தவெக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தொகுதி மறுவரையறையால் உள்ளாட்சி அமைப்புகளையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், தவெக  கனவுல  மண் விழுந்த கதையாயிறும்.  தேர்தலை உடனடியாக நடத்துவது சிக்கலாகும். இதனால் தவெகவின் அரசியல் திட்டத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

ஆக எலி பூனையும் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக ஆட்சியை தமிழகத்தில் இருந்து தகர்த்து எறிய கைகோர்ப்பார்கள்  அல்லது நான் புடிச்ச முயலுக்கு முனு காலுனு மோதிக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *