Droupadi Murmu: 5 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்!

Droupadi Murmu | Warship | Dedicate

இந்திய கடற்படையில் ‘நீலகிரி’, ‘ஹிம்கிரி’, ‘உதய கிரி’, ‘துனகிரி, ‘தாரகிரி’ என்று பெயரிடப்பட்ட 5 போர்க்கப்பல்களை வருகிற 17-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்…

புதுடெல்லி: இந்திய கடற்படையில் ‘நீலகிரி’, ‘ஹிம்கிரி’, ‘உதய கிரி’, ‘துனகிரி, ‘தாரகிரி’ என்று பெயரிடப்பட்ட 5 போர்க்கப்பல்கள் உள்ளன. 6-வதாக விந்தியகிரி என்ற பெயரிலான போர்க்கப்பல் கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் கப்பல் கட்டும் நிலையத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்தப் போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 17-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ், மும்பையை தளமாகக் கொண்ட எம்.டி.எல். நிறுவனத்தில் 4 கப்பல்களும், கொல்கத்தா ஜி.ஆர்.எஸ்.இ. நிறுவனத்தில் 3 கப்பல்களும் கட்டுமானத்தில் உள்ளன. முதல் ஐந்து கப்பல்கள் 2019-2022-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன.

இந்தப் போர்க்கப்பல்களில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் மற்றும் பிளாட்பார்ம் மேனேஜ்மென்ட் சிஸ்டம்கள் உள்ளன என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். “விந்தியகிரி போர்க்கப்பல், உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும். அதே வேளையில், அதன் வளமான கடற்படை பாரம்பரியத்துக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அடையாளமாக உள்ளது” என்று கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *